60வது படத்திற்காக விஜய் இழந்த அந்த '10' என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,July 06 2016]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 60வது படத்தின் சென்னை மற்றும் ஐதராபாத் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது.
'அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை முதல் கேரக்டருக்கான படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் இரண்டாவது கேரக்டரின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், இந்த கேரக்டருக்காக விஜய் 10 கிலோ உடல் எடையை குறைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
பொதுவாக விஜய் பெரிய அளவில் கெட்டப்பை மாற்றி நடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது இருந்து வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த படத்தின் இரண்டாவது கெட்டப் இருக்கும் என்று கூறப்படுகிறது.
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரித்துள்ளது.

More News

அடுத்தகட்டத்திற்கு செல்கிறது சசிகுமாரின் 'கிடாரி'

'வெற்றிவேல்' என்ற வெற்றி படத்திற்கு பின்னர் சசிகுமார் நடித்து வந்த 'கிடாரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில்...

சிம்பு-ஆதிக்-யுவன் கூட்டணியின் வித்தியாசமான திட்டம்

மூன்று வித்தியாசமான வேடங்களில் சிம்பு நடிக்கும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும்...

சூர்யாவின் 'சிங்கம் 3' புதிய அப்டேட்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'S3' படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில் சூர்யா ஓய்வு எடுப்பதற்காக வெளிநாடு சென்றதால் தற்காலிக பிரேக் ஏற்பட்டது என்பது தெரிந்ததே...

இன்று 'அஜித் 57' படத்தின் முக்கிய தினம்

'தல' அஜித் நடித்த 'வேதாளம்' கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து அவருடைய அடுத்த படம் தொடங்கப்பட்டுள்ளது...

விக்ரமின் 'இருமுகன்' படத்தில் எத்தனை பாடல்கள். புதிய தகவல்

சீயான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்களை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது...