03.03.2023 அன்று மிகப்பெரிய சர்ப்ரைஸ்: சிம்பு பட தயாரிப்பாளர் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடித்த திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் வரும் மார்ச் மூன்றாம் தேதி அன்று மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருப்பதாக அறிவித்துள்ளது.
சிம்பு நடிப்பில், கிருஷ்ணா இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’பத்து தல’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் புரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று மார்ச் மூன்றாம் தேதி வெளியாகும் என ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தனது டுவிடட்ர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அனேகமாக மார்ச் மூன்றாம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து மார்ச் மூன்றாம் தேதிக்காக சிம்புவின் ரசிகர்களுக்கு காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படம், ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை அடுத்து சிம்புவின் ஹாட்ரிக் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
A Huge SURPRISE coming your way from #PathuThala on 03.03.23 🔥
— Studio Green (@StudioGreen2) February 28, 2023
Let the countdown begin 💥#Atman #SilambarasanTR #AGR#PathuThalaFromMarch30
Worldwide #StudioGreen Release💥@StudioGreen2 @Kegvraja @PenMovies @jayantilalgada @SilambarasanTR_ @Gautham_Karthik @arrahman pic.twitter.com/isBQs56v5D
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com