'தளபதி 68': அறிவிப்பு வெளியான சில நாட்களில் பிரமாண்ட கட் அவுட்.. அதுவும் எந்த நாட்டில் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,May 24 2023]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் பிரம்மாண்டமான கட் அவுட் மலேசியாவில் வைக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய்யின் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தளபதி 68’. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் மற்ற தகவல்கள் ’லியோ’ படத்தின் ரிலீஸ்க்கு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.



இந்த நிலையில் ’தளபதி 68’ படத்தின் அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே இந்த படத்திற்கான பிரம்மாண்டமான கட் அவுட்டை மலேசியாவில் உள்ள விஜய் ரசிகர்கள் வைத்துள்ளனர். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.



விஜய்க்கு தமிழகம் மற்றும் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளனர் என்பதை இந்த பிரம்மாண்டமான கட் அவுட் நிருபித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது