கமலுக்கு இணையாக கட்-அவுட்: லோகேஷ் சொந்த ஊர் ரசிகர்களின் அன்புமழை!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படம் வெளியான பல திரையரங்குகளில் கமல்ஹாசன் கட்-அவுட்டுக்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் லோகேஷ் கனகராஜின் சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் கமல்ஹாசனுக்கு இணையாக மிகப்பெரிய கட்-அவுட்டை வைத்துள்ளனர். இந்த கட்-அவுட் குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மாநகரம், கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ திரைப்படமும் வெற்றிப் படமாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக நான்கு வெற்றி படங்களை கொடுத்த மிக அரிய இயக்குனர்களின் பட்டியலில் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜின் சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள அவருடைய நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் விக்ரம் வெற்றி பெற்றதையொட்டி அவருக்கு கமல்ஹாசனுக்கு இணையாக கட்-அவுட் வைத்து தங்கள் அன்பு மழையை வெளிப்படுத்தியுள்ளனர்.