விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல இளம் நடிகை!

  • IndiaGlitz, [Monday,July 22 2019]

விக்ரம் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'கடாரம் கொண்டான்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான 'விக்ரம் 58' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

'டிமான்டி காலனி' 'இமைக்கா நொடிகள்' போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். லலித்குமார் மற்றும் வைகாம் 18 நிறுவனங்கள் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக கோலிவுட்டின் இளம் நடிகைகளில் ஒருவராகிய ப்ரியா பவானிசங்கர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே சமீபத்தில் இவர் கமலஹாசனின் 'இந்தியன் 2, மற்றும் ஜீவா, அருள்நிதி, அதர்வா, அருண் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில் தற்போது விக்ரமின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

விக்ரம், பவானி சங்கர் முதன்முதலாக இணைந்து நடிக்கும் இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சூர்யாவுக்கு பதில் நான் பேசியிருந்தால்? காப்பான்' விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

சூர்யா, ஆர்யா, சாயிஷா, மோகன்லால் நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும்

மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு:  தல தோனி மிஸ்ஸிங் 

இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கு சென்று அடுத்த மாதம் டி20, ஒருநாள் போட்டி, மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

சூர்யாவின் 'காப்பான்' படத்தில் பாடகியாகிய பிரபல இசையமைப்பாளரின் மகள்

​​​​​​​சூர்யா நடிப்பில், இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள 'காப்பான்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

சாக்சியை வச்சு செய்யும் பிக்பாஸ்: கவின் தப்பிப்பாரா?

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாக்சிக்கு பிறந்து நாள் என்றும் பாராமல் ஒரு குறும்படத்தை ஒளிபரப்பி கடந்த இரண்டு நாட்களாக நடந்த மீட்டிங் பிரச்சனைக்கு காரணம் சாக்சிதான்

அழுகும் அபிராமி, சலிப்பில் மோகன், டென்ஷனில் மீரா - சேரன்: வெளியேறுவது யார்?

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேற போகும் போட்டியாளர் யார் என்பதை அறிவிப்பது குறித்த புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. வழக்கம்போல்