தமிழ் ராக்கர்ஸிடம் வேண்டுகோள் விடுத்த சென்னை 2 சிங்கப்பூர் இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளைஞர்களின் புதிய முயற்சியில் கடந்த வாரம் வெளியான 'சென்னை 2 சிங்கப்பூர்' திரைப்படம் முதல் பாதி நல்ல விமர்சனத்தையும் இரண்டாம் பாதி கலவையான விமர்சனங்களையும் பெற்றது. இருப்பினும் இந்த படம் திரையரங்குகளில் காட்சிகள் அதிகரித்திருப்பது இந்த படம் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருப்பதையே காட்டுகிறது.
இந்த நிலையில் வழக்கம்போல் 'சென்னை 2 சிங்கப்பூர்' திரைப்படமும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகிவிட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திடம் வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்
அதில் அவர் கூறியதாவது: 'சென்னை 2 சிங்கப்பூர்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருந்தாலும் இந்த படத்திற்காக நாங்கள் போட்ட பணத்தை வெறும் நான்கு நாட்களில் எடுத்துவிடலாம் என்று கூறுவது நடைமுறைக்கு சாத்தியமாகாது. இந்த படத்தை ஆன்லைன் பைரசியில் அப்லோட் செய்திருக்கும் இணையதளங்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து எங்களுக்காக ஒரு 30 நாள் மட்டும் இந்த படத்தை இணையதளங்களில் இருந்து நீக்கிவிடுங்கள். அதன் பின்னர் நீங்கள் அப்லோட் செய்து கொள்வதில் எந்தவித பிரச்சனையும் இல்லை, இதை ஒரு நண்பனாக வேண்டுகோள் வைக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.,
இயக்குனரின் இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவாகி வருகிறது. அவற்றில் ஒன்று, 'திருடங்கிட்ட திருடாதடானு கொஞ்ச வேண்டியிருக்கு, இதுவொரு மோசமான நிலை' என்று கூறப்பட்டுள்ளது.
A heartfelt message to #Tamilrockers and #TamilGun from #Chennai2Singapore director @AbbasAkbar and me
— Ghibran (@GhibranOfficial) December 20, 2017
Please share and convey the message pic.twitter.com/7NoSKoGmEF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com