உயிருடன் மீட்கப்பட்டும் பலியான ஹரியானா சிறுமி!

  • IndiaGlitz, [Monday,November 04 2019]

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹர்சிங்புரா என்ற பகுதியில் நேற்று மாலை 5 வயது சிறுமி ஒருவர் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறுதலாக கீழே விழுந்த நிலையில் அவரை உயிருடன் மீட்க மீட்புப்படையினர் தீவிர முயற்சியில் இருந்தனர்.

ஆழ்துளை கிணற்றில் சிறுமி 50 அடியில் இருப்பதை உறுதி செய்த மீட்புப்படையினர் உடனடியாக பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து ஆழ்துளை அருகே குழி தோண்டினர். இன்று அதிகாலை ஆழ்துளைக்கும் குழிக்கும் இடையே பாதை அமைத்து சிறுமியை உயிருடன் மீட்டனர்.

ஆனால் சிறுமி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை செய்தபோதிலும் சிகிச்சையின் பலனின்றி சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

ஆழ்துளையில் விழுந்த சிறுமியின் பெயர் ஷிவானி என்றும், பக்கத்து வீட்டுக்காரர் தோண்டிய ஆழ்துளை கிணறு பல மாதங்களாக மூடப்படாமல் இருந்தது என்றும், அந்த ஆழ்துளையில் தான் ஷிவானி விழுந்து உயிரிழந்தார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

More News

வசூல் மழையில் கைதி: விநியோகிஸ்தர்களுக்கு ஜாக்பாட்

கடந்த தீபாவளி விருந்தாக தளபதி விஜய்யின் பிகில் படம் வெளியான நிலையில் அந்த படத்துடன் வெளியான ஒரே தமிழ்படம் கார்த்தி நடித்த கைதி' என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்யின் பிகில் பத்தே நாளில் வசூல் செய்த மிகப்பெரிய தொகை

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்ததே. இந்த படம் 5 நாட்களில் ரூபாய் 100 கோடிக்கு மேல்

பிரதமர் மோடிக்கு தமிழ் இயக்குனரின் வேண்டுகோள் கடிதம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று முன் தினம் மத்திய அரசு கோல்டன் ஐகான் விருது அறிவித்திருந்த நிலையில் பல்வேறு தரப்பினர் இந்த விருதில் உள்நோக்கம் இருப்பதாகவும்

40 ஆண்டுகால நண்பருக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாதுறையில் சிறப்பாக சேவை ஆற்றியதற்காக மத்திய அரசு அவருக்கு 'ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி' என்கிற பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்குவதாக

ரஜினிக்கு விருது வழங்கியது உள்நோக்கம் உள்ளது: பிரபல எழுத்தாளர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஐகான் கோல்ட் விருதை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அவருக்கு ஒருபக்கம் பாராட்டுக்கள் குவிந்து வந்தபோதிலும்,