ஃபேஸ்புக் நட்பால் ஏற்பட்ட விபரீதம்: சென்னையில் நிர்வாண வீடியோ கும்பல் கைது
- IndiaGlitz, [Tuesday,July 31 2018]
ஃபேஸ்புக் நட்பை பயன்படுத்தி நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டும் சென்னை கும்பல் ஒன்றை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வடபழனியில் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ள மந்திரமூர்த்தி என்பவர் ஃபேஸ்புக் மூலம் ஓரினச்சேர்க்கையாளர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடன் நட்பு கொள்வார். பின்னர் அவர்களிடம் சேட்டிங்கில் நைசாக பேசி தனது அறைக்கு வருமாறு அழைப்பு விடுப்பார்.
இவருடைய குழைவான பேச்சை நம்பி அவரது அறைக்கும் வரும் நபர்களை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்து அதை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தினேஷ்பாபு என்பவர் மந்திரமூர்த்தியின் பேச்சை நம்பி அவருடைய அறைக்கு சென்றுள்ளார். மந்திரமூர்த்தி அவரையும் நிர்வாண வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் இல்லை என்று தினேஷ்பாபு கூறியதும் அவரை கடுமையாக மந்திரமூர்த்தியும் அவருடைய நண்பர்களும் தாக்கினர். இதனால் தினேஷ்பாபுவின் வலி தாங்காமல் அலரினார். அவருடடய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் போலீசில் புகார் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் மந்திரமூர்த்தியையும் அவருடைய நண்பர்கள் மூவரையும் கைது செய்தனர்.
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகிவிட்ட சமூக வலைத்தளங்களை இதுபோன்ற மிரட்டலுக்கும் பயன்படுத்தி வருவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.