கமல்ஹாசனுடன் விவசாய சங்க நிர்வாகிகள் சந்திப்பு

  • IndiaGlitz, [Tuesday,August 22 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் அதிரடி அரசியல் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். ஊழலுக்கு எதிராக அவர் தொடங்கியுள்ள நடவடிக்கைக்கு கமல் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக விவசாயிகளின் பிரச்சனைகள் கடந்த பல மாதங்களாக கண்டுகொள்ளமலும், திர்க்கப்படாமலும் உள்ளது. இந்நிலையில் இன்று கமல்ஹாசனை விவசாயிகள் சங்கத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் அவரது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சந்தித்தனர். விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து கமலுடன் ஆலோசனை செய்த அவர்கள் விவசாயிகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஊழலுக்கு எதிராக கமல் கொடுத்த குரலுக்கு பெரும் ஆதரவு கிடைத்ததை அடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கமல் குரல் கொடுத்தால் நிச்சயம் அந்த குரல் மத்திய மாநில அரசுகளை தட்டியெழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இதுதான் 'விவேகம்' படத்தின் கதையா?

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாகிய 'விவேகம்' ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் இந்த படம் குறித்த செய்திகள் ஒருசில மணி நேரத்திற்கு ஒருமுறை வெளிவந்து பரபரப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

மாலத்தீவில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படப்பிடிப்பு

மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'.

ஹேப்பி பர்த்டே சென்னை: இன்று சென்னையின் 378வது பிறந்த நாள்

இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும், தமிழகத்தின் தலைநகருமான சென்னைக்கு இன்று 378 வயது ஆகிறது.

நீட் அவசர சட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

நீட் தேர்வில் இருந்து இந்த ஒரு ஆண்டு மட்டும் விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு இயற்றிய அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளதை அடுத்து தமிழக மாணவர்களின் கனவு தகர்ந்துள்ளது.

தினகரன் அணியில் மேலும் 10 எம்.எல்.ஏக்கள்: ஆட்சி தப்பிக்குமா?

அதிமுகவின் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் நேற்று இணைந்ததால் அதிருப்தி அடைந்த தினகரன் அணியின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு தங்கள் ஆதரவு இல்லை என்று தெரிவித்தனர்