அபிநந்தனை வரவேற்க எல்லையில் குவிந்த பொதுமக்கள்: திருவிழா கோலத்தில் வாகா!

  • IndiaGlitz, [Friday,March 01 2019]

சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் அபிநந்தனை விடுவிக்க நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஒப்புக்கொண்டார். மத்திய அரசு எடுத்த ராஜதந்திரத்தின் அடிப்படையில் உலக நாடுகளின் நிர்ப்பந்தத்தினால் பாகிஸ்தானால் விடுவிக்கப்படும் அபிநந்தன் இன்று வாகா எல்லையில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகிறார்.

இதனையடுத்து அபிநந்தனை வரவேற்க நேற்றிரவே சென்னையில் இருந்து அவரது பெற்றோர்கள் டெல்லி சென்றிருக்கும் நிலையில் வாகா எல்லையில் அபிநந்தனை வரவேற்க ஏராளமான பொதுமக்களும் குவிந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியா மற்றும் அபிநந்தனுக்கு ஆதரவாக கோஷமிட்டு அபிநந்தன் விடுதலையை ஒரு திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

வாகா எல்லையில் ஆண்கள், பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள், பெரியவர்கள், என பலர் குவிந்திருப்பதை அடுத்து அந்த பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

More News

எல்.கே.ஜி வெற்றிக்கு பின் புரமோஷன் போஸ்டரில் ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி கதை திரைக்கதை வசனம் எழுதி நடித்த 'எல்.கே.ஜி' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி எதிர்பார்த்ததைவிட அதிகமான வசூலை தந்து கொண்டிருக்கின்றது

எம்ஜிஆர், சிவாஜி படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை காலமானார்

ழம்பெரும் நடிகை சீதாலட்சுமி. கடந்த சில தினங்களாக இவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி காலமானார்.

லைகா நிறுவனத்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் ரஜினி, கமல் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்கள் முதல், அறிமுக நட்சத்திரங்கள் பணிபுரியும் சின்ன பட்ஜெட் படங்கள் வரை தயாரித்துவரும் நிறுவனம் லைகா.

தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்களின் முழுவிபரங்கள்

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்து வரும் நிலையில் இந்த ஆண்டு பல்வேறு கலைப்பிரிவுகளின்

இரட்டை இலை சின்னம் யாருக்கு? டெல்லி ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக இரண்டாக உடைந்ததால் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.