கமல், ரஜினியை அடுத்து அரசியல் களமிறங்கும் விஜய்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் அந்த வெற்றிடத்தை நிரப்ப வழக்கம்போல் கோலிவுட் திரையுலகினர் முயற்சித்து வருகின்றனர். கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் நேரடி அரசியலில் ஈடுபடுவது மட்டுமின்றி தங்களுடைய திரைப்படங்களிலும் அரசியல் கருத்துக்களை முன்வைக்கின்றனர். ரஜினியின் 'காலா' மற்றும் அவர் நடிக்கவுள்ள கார்த்திக் சுப்புராஜ் படம் ஆகியவற்றில் அனல்கக்கும் அரசியல் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' திரைப்படம் முழுக்க முழுக்க தற்கால அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' திரைப்படமும் அரசியல் சார்ந்த படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நிஜ அரசியல்வாதியான பழ.கருப்பையா படத்திலும் அரசியல்வாதியாக நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் ஒரு அரசியல் கூட்டம் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், இந்த காட்சியில் ஆயிரக்கணக்கான ஜூனியர் நடிகர்கள் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் முக்கிய வேடங்களில் ராதாரவி, வரலட்சுமி, யோகிபாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஆஸ்கார் நாயகன் இசையமைக்கும் இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout