டெல்லி மாநாட்டில் பங்கேற்ற அரசு மருத்துவர்: சிகிச்சை பெற்ற அனைவரையும் வளைக்க முடிவு

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மத சம்பந்தமான மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் என்றும், அவ்வாறு கலந்து கொண்டு தமிழகத்திற்கு மீண்டும் திரும்பியவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் எனவே அவர்கள் அனைவரும் தங்களை தாங்களே கொரோனா பரிசோதனை நடத்த முன்வர வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டது.

இதனையடுத்து டெல்லி சென்று திரும்பிய 500க்கும் மேற்பட்டோருக்கு தற்போது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் ஒருசிலரை தேடும் பணியில் காவல்துறையினர் உள்ளனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் என்ற பகுதியை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவர் ஒரு அரசு மருத்துவராக இருந்தும் இதுவரை தான் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளாமல் இருந்துள்ளார்.

அதுமட்டுமின்றி அந்த மருத்துவர் தன்னை எந்த விதமான பரிசோதனை செய்துகொள்ளாமல் இன்று காலை வரை பணியில் இருந்து நோயாளிகளுக்கு சிகிச்சையும் அளித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அந்த மருத்துவரிடம் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்ற நோயாளிகளையும் சுற்றி வளைக்க சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

ஆன்லைனில் ஏமாந்த பிரபல நடிகை: அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு

தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து பிரபலமான நடிகை சினேகா உல்லல் ஆன்லைன் மூலம் ஏமாந்த சம்பவம் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு பாடமாக உள்ளது.

மனிதர்களின் தொல்லையே இல்லை!!! கடலில் இருந்து வெளியே வந்த 8 லட்சம் ஆமைகள்!!!

கொரோனா நோய்த்தொற்று பரவியதில் இருந்து பெரும்பலான நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது

தூய்மை பணியாளர்களுக்கு மலர்தூவி மாலை அணிவித்த பொதுமக்கள்: நெகிழ்ச்சி வீடியோ

நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவ ஊழியர்களும், காவல்துறையினரும் இரவு

மூன்று மாதங்களுக்கு சிலிண்டர் இலவசம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

பாரதப் பிரதமர் மோடியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று மாதங்களுக்கு கட்டணம் இன்றி சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும்

LPG  கேஸ் சிலிண்டர் விலையில் ரூ. 65 வரை குறைப்பு!!!

மத்திய அரசு ஆண்டுதோறும் ஒரு குடும்பத்திற்கு 12 LPG கேஸ் சிலிண்டர்களை மானிய விலையில் வழங்கிவருகிறது.