சூர்யாவின் அடுத்த படத்தில் நடிக்க வேண்டுமா? இதோ ஒர் அற்புத வாய்ப்பு.. வைரல் விளம்பரம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யாவின் அடுத்த படத்தில் நடிப்பதற்கான புது முகங்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக விளம்பரம் ஒன்று வெளியாகியிருப்பதை அடுத்து சூர்யாவுடன் நடிக்க விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
சூர்யாவின் அடுத்த திரைப்படமான ’சூர்யா 43 ’ என்ற படத்தை சுதா கொங்கரா இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த விளம்பரத்தில் கூறியிருப்பதாவது: புதிதாக உருவாக இருக்கும் ’சூர்யா 43 ’ என்ற தமிழ் திரைப்படத்திற்கு நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற உள்ளது. 18 முதல் 29 வயது வரையிலான ஆண்கள் மற்றும் பெண்கள், 30 முதல் 70 வரையிலான ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு விதமாக தேர்வுகள் நடைபெற இருப்பதாகவும், தேர்வுக்கு வரும் நபர்கள் தங்கள் நடிப்பு திறமையை வெளிப்படுத்த ஒரு நிமிடத்திற்கான காட்சியை தங்கள் சொந்த வசனத்துடன் தயார்படுத்திக் கொண்டு ஜனவரி 11 மற்றும் 12ஆம் தேதி நேரில் அணுகவும் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சமூக வலைதளத்தில் இந்த விளம்பரம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வாய்ப்பை நடிப்பு திறமையுள்ள புது முகங்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Audition Alert!
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) January 9, 2024
Embrace the spotlight and audition for our next, #Suriya43🔥
Your chance to shine on the big screen awaits✨#Audition #CastingCall pic.twitter.com/ck5D4rXKNt
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments