ரசிகர்களுக்கு கமல்ஹாசன் கூறவுள்ள நல்ல செய்தி

  • IndiaGlitz, [Saturday,June 30 2018]

கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி சுதந்திரதின விடுமுறையில் வெளியாகவுள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு கமல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை அடுத்து 'சபாஷ் நாயுடு' படத்தை கமல் தொடங்குவார் என்றும், அதன் பின்னர் ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' படத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் 2 நிகழ்ச்சி முடிந்தவுடன் 'சபாஷ் நாயுடு படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இன்று டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு கமல் பதிலளித்து வருகிறார். அதில் ஒரு ரசிகர் 'ஆண்டவா உங்கள் அனைத்து திரைப்படங்களையும் ஒவ்வொன்றாக டிஜிட்டல்படுத்தி ரி ரிலீஸ் செய்யனும்... (ராஜ்கமல் படங்கள் கண்டிப்பாக)... செய்வீர்களா? என்று கேட்ட கேள்விக்கு, 'நல்ல செய்தி ஒன்று உங்களுக்காக விரைவில் வரவிருக்கிறது!' என்று கமல் பதில் கூறியுள்ளார்.

எனவே கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படங்களாகிய அபூர்வ சகோதரர்கள், ஹே ராம், தேவர் மகன், சதிலீலாவதி, மைக்கேல் மதன காம ராஜன், நாயகன், குருதிப்புனல், விருமாண்டி, ஆளவந்தான், சிங்கார வேலன், விக்ரம், சத்யா போன்ற படங்களில் ஒன்றின் டிஜிட்டல் வடிவம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது