அச்சு அசலாக செளந்தர்யா போலவே இருக்கும் இளம்பெண்.. ரசிகர்கள் கொடுத்த பட்டம் என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை சௌந்தர்யா போலவே அச்சு அசலாக ஒரு இளம் பெண் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அந்த பெண்ணுக்கு ரசிகர்கள் ஜூனியர் சௌந்தர்யா என்று பட்டம் அளித்துள்ளனர்.
ரஜினிகாந்த் நடித்த ’அருணாச்சலம்’ ’படையப்பா’ கமல்ஹாசன் நடித்த ’காதலா காதலா’ கார்த்தி நடித்த ’பொன்னுமணி’ விஜயகாந்த் நடித்த ’தவசி’ ’சொக்கத்தங்கம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சௌந்தர்யா. கடந்த 2004 ஆம் ஆண்டு பெங்களூருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய ஹெலிகாப்டரில் பயணம் செய்த போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் நடிகை செளந்தர்யா காலமானார்.
இந்த நிலையில் அச்சு அசலாக சௌந்தர்யா போலவே இளம் பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அவரது வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவருக்கு ரசிகர்கள் ஜூனியர் செளந்தர்யா என்ற பட்டமளித்துள்ள நிலையில் இன்னும் நிறைய வீடியோக்களை வெளியிடுங்கள் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments