close
Choose your channels

10 ஆயிரம் கொடுத்தால் 50 ஆயிரம்.. ஐபோன் இலவசம்.. பாடகி சித்ரா அதிர்ச்சி..!

Wednesday, October 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்றும் ஐபோன் இலவசம் என்றும் பாடகி சித்ரா பெயரில் மோசடியான விளம்பரம் வெளியானதை அடுத்து அவர் இந்த தகவலை அதிர்ச்சியுடன் மறுத்துள்ளார்.

பிரபலங்களின் பெயர்களில் மோசடியான விளம்பரம் வந்து பணம் பறிக்கும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் பாடகி சித்ராவின் பெயரில் நடக்கும் ஒரு மோசடி குறித்து தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் பாடகி சித்ராவின் பெயரில் சில மர்ம நபர்கள் மோசடி விளம்பரம் ஒன்றை பதிவு செய்துள்ளனர். அந்த விளம்பரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தூதராக சித்ரா இருப்பதாகவும் அதில் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்து பங்குகளை பெற்றால் அதன் மதிப்பு ஒரே வாரத்தில் 50 ஆயிரம் ஆக உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இதன் முதலீடு செய்பவர்களுக்கு ஐபோன் பரிசாக தரப்படுவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தைப் பற்றி தனது பார்வைக்கு வந்தவுடன் சித்ரா உடனடியாக இது தன்னுடைய பெயரில் நடக்கும் மோசடி என்றும் இதில் யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் இந்த போலி விளம்பரத்தை பற்றிய விழிப்புணர்வு எச்சரிக்கை ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment