ஏழு மாத குழந்தையை அடகு வைக்க முயற்சித்த அப்பா!
Send us your feedback to audioarticles@vaarta.com
தங்கம், வெள்ளி போன்ற பொருட்களைத்தான் அவசரத்திற்கு அடகு வைப்பதை இதுவரை பார்த்துள்ளோம். ஆனால் அமெரிக்காவில் ஒருவர் தனது குழந்தையை அடகு வைக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா பகுதியை சேர்ந்தவர் ஸ்லோகும். இவர் அங்குள்ள ஒரு அடக்குக்கடைக்கு சென்று தனது ஏழு மாத குழந்தையை அடகு வைக்க வேண்டும் என்றும், இந்த குழந்தையை வைத்து கொண்டு எவ்வளவு பணம் தருவீர்கள் என்றும் அடகுக்கடைக்காரரிடம் கேட்டுள்ளார். இதனை கண்டு அடகுக்கடைக்காரர் அதிர்ச்சி அடைய, 'இந்த குழந்தையால் தனக்கு எந்த பயனும் இல்லை என்றும், அதனால் குழந்தையை வைத்து கொண்டு பணம் தாருங்கள்' என்றும் திரும்பவும் கேட்டுள்ளார்.
உடனடியாக அடகுக்கடைக்காரர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்க, போலீஸ் வந்தவுடன் ஸ்லோகும் அப்படியே பிளேட்டை திருப்பி போட்டார். தான் குழந்தையை அடகு வைப்பது போல் நடித்ததாகவும், அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பிரபலமாவதற்காக இப்படி செய்ததாகவும் கூறினார். இதனையடுத்து குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு அந்த நபரை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments