close
Choose your channels

நடிகர் சங்க அலுவலகத்தில் திடீர் தீ விபத்து: சேதங்கள் எவ்வளவு?

Monday, December 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சங்க அலுவலகம் சென்னை தி நகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் இயங்கி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென இன்று அதிகாலை 4 மணிக்கு நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடிகர் சங்க அலுவலகத்தில் இன்று அதிகாலை 4 மணிக்கு கிச்சனில் தீ விபத்து ஆரம்பித்ததாகவும் இதனை அடுத்து தீ மளமளவென பரவியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் நடிகர் சங்க அலுவலகத்தில் இருந்த முக்கிய கோப்புகள் சேதமடைந்து இருக்கலாம் என்றும் ஆனால் சேத விவரங்கள் இன்னும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது

நடிகர் சங்கம் தற்போது தமிழக அரசு நியமனம் செய்த தனி அலுவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment