close
Choose your channels

'அவதார் 2' படம் பார்த்த ரசிகர் திடீர் மரணம்.. என்ன காரணம்?

Saturday, December 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான ’அவதார் 2’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் ’அவதார் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது என்பதும் 160 மொழிகளில் 52000 திரையரங்குகளில் உலகம் முழுவதும் இந்த படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ‘அவதார்’ திரைப்படத்தை லட்சுமி ரெட்டி சீனு என்பவர் தனது சகோதரருடன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து தியேட்டரிலேயே சுருண்டு விழுந்தார்.

இதனையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறி உள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த லட்சுமி ரெட்டி சீனுவுக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்றும் அவரது குடும்பத்தினர் அவரது மறைவால் கடும் அதிர்ச்சியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment