close
Choose your channels

கார்த்தி - நலன் குமாரசாமி படத்தின் நாயகி இந்த பிரபல நடிகையா?

Wednesday, April 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி நடித்து வரும் ’ஜப்பான்’ படத்தை அடுத்து நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.

மேலும் இந்த படத்தில் பிரபல ஹிந்தி நடிகை காயத்ரி பரத்வாஜ் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க இருப்பதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

நடிகை கீர்த்தி ஷெட்டி ஏற்கனவே ஜெயம் ரவி நடிக்க இருக்கும் ’ஜெனி’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது

ஏற்கனவே விஜய் சேதுபதியின் ’உப்பன்னா’ திரைப்படத்தில் நாயகி ஆக நடித்த கீர்த்தி ஷெட்டி, லிங்குசாமி இயக்கத்தில் உருவான ’தி வாரியார்’ என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment