'தலைவர் 170' படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகர்? அவருக்கு பதில் இவரா?

  • IndiaGlitz, [Thursday,August 17 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று உள்ளது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இன்னும் அரங்கு நிறைந்த காட்சிகளாக பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதால் இந்த படம் வசூல் சாதனை செய்யும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தெரிகிறது. ’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நானி ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக செய்திகள் வெளியானது, ஆனால் அவர் தற்போது இந்த படத்தில் நடிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அவருக்கு பதில் இன்னொரு தெலுங்கு பிரபல நடிகர் சர்வானந்த் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அனிருத் இசையில் உருவாகயிருக்கும் இந்த திரைப்படம் ’ஜெயிலர்’ படத்தின் மிகப்பெரிய வெற்றி காரணமாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்த வாரம் ஒரே ஒரு தமிழ்ப்படம்.. அதுவும் நேரடி ரிலீஸ்.. ஓடிடி ரிலீஸ் விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது போல் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடியில் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

ஷாருக்கான் வீட்டின் சுவர்களை அலங்கரித்த 'ஜவான்' ஓவியங்கள்.. வைரல் வீடியோ..!

அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஜவான்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என

220 மீட்டர் உயரம்.. 55வது மாடி.. துபாயில் 'எட்ஜ் வாக்' செய்த தமிழ் நடிகை.. வைரல் வீடியோக்கள்..!

துபாய் செல்லும் சுற்றுலா பயணிகள் 55வது மாடியில் 220 மீட்டர் உயரத்தில் உள்ள  'எட்ஜ் வாக்' என்ற அற்புதமான அனுபவத்தை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சிமா  மோகன்   இடுப்பில் கயிறு கட்டி இழுக்கும் கெளதம் கார்த்திக்.. வேற லெவல் வொர்க் அவுட் வீடியோ..!

நடிகை மஞ்சிமா மோகன் திருமணத்தின் போது குண்டாக இருந்த நிலையில் தற்போது அவர் கடுமையாக வொர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்துள்ளார் என்பதும் அவரது தற்போதைய தோற்றத்தை

'காவாலா' பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஜப்பான் தூதர்.. ரஜினி போலவே கண்ணாடி போட்டு அசத்தல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'காவாலா' பாடலுக்கு  இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் டான்ஸ்