தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பிரபல பாடகியின் மகன்.. எந்த ஹீரோ படம்?

  • IndiaGlitz, [Tuesday,October 15 2024]

பிரபல பாடகியின் மகன் தமிழ் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் பல பக்தி பாடல்களையும் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 1980 ஆம் ஆண்டில் முதல் பாடத் தொடங்கிய இவர், சமீபத்தில் வெளியான ’வீட்டுல விசேஷம்’, ’கண்ணகி’ உள்ளிட்ட படங்களிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.

இந்த நிலையில் பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்ராஜ், மலையாளத்தில் ஏற்கனவே சில படங்களுக்கு இசையமைத்திருந்த நிலையில், தற்போது சித்தார்த் நடிக்க இருக்கும் தமிழ் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், முக்கிய வேடங்களில் சரத்குமார், தேவயானி, மீரா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

’எட்டு தோட்டாக்கள்’ உள்ளிட்ட சில படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தெறிக்கவிடும் ஆக்சனில் சமந்தா.. சிட்டாடல்: ஹனி ஃபன்னி வெப்சீரிஸ் டிரைலர்..!

நடிகை சமந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ள சிட்டாடல் என்ற வெப்தொடர் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் நவம்பர் 7ஆம் தேதி இந்த தொடர் அமேசன்

'தளபதி 69' படத்தில் விஜய்யின் கேரக்டர் இதுவா? இன்னொரு தீரனை எதிர்பார்க்கலாமா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி முதல் கட்ட படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாக

'ப' வரிசை படங்களின் இயக்குனர் பீம்சிங் 100வது பிறந்த நாள்: பிரபு நெகிழ்ச்சி பதிவு..!

தமிழ் சினிமாவில் 'ப' என்ற எழுத்தில் தொடங்கும் பல படங்களை இயக்கியவர் பீம்சிங் என்பதும், இவர் சிவாஜி கணேசனை வைத்து மட்டும் பல படங்களை எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெட்கம் கெட்ட அமைச்சருங்க, டிவி, ஊடகம் யாராச்சும் அகப்பட்டீங்க.... நடிகை கஸ்தூரி ஆவேசம்..!

நடிகை கஸ்தூரி தனது வீட்டின் அருகே மழை நீர் தேங்கி இருப்பதாகவும் எங்கேயுமே தண்ணீர் தேங்கவில்லை என்று சொல்லித் தெரிகிற வெட்கங்கெட்ட அமைச்சர்கள், டிவி ஊடகம் யாராவது

நயன்தாராவின் அடுத்த பட கேரக்டர் வித்யா ருத்ரன்.. படப்பிடிப்பு புகைப்படம் வைரல்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் நடிக்கும் அடுத்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு, அதில் தான் நடிக்கும் கேரக்டர் வித்யா ருத்ரன் என்று பதிவு செய்து, படப்பிடிப்பில் கலந்து கொண்ட