close
Choose your channels

பாடகி சைந்தவிக்கு வாய்ப்பு கொடுத்த பிரபல இசையமைப்பாளர்.. வைரல் புகைப்படங்கள்..!

Saturday, June 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி பாடகிகளில் ஒருவரான சைந்தவிக்கு பிரபல இசையமைப்பாளர் தான் இசையமைக்கும் படத்தில் ஒரு பாடலை பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யும்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் திரை உலகின் பிரபல பாடகிகளில் ஒருவர் சைந்தவி என்பதும் இவர் கடந்த 2004ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் உருவான ’அந்நியன்’ திரைப்படத்தில் ’அண்டங்காக்கா கொண்டக்காரி’ என்ற பாடலை பாடியதன் மூலம் திரையுலகில் பாடகியாக என்ட்ரி ஆனார்.

அதன் பிறகு ஏ ஆர் ரகுமான், அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ், இமான், ஸ்ரீகாந்த் தேவா, யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர், மணி ஷர்மா, ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி, நிவாஸ் கே பிரசன்னா, ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கம்போஸ் செய்த பாடல்களை பாடியுள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’அம்மா என்னும் மந்திரமே’ என்ற பாடல் இவர் பாடியது என்பதும், இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பேபி அண்ட் பேபி’ என்ற திரைப்படத்திற்கு டி இமான் இசையமைக்கும் நிலையில் இந்த படத்திற்காக சைந்தவி பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரியோ ராஜ், யோகிபாபு, சத்யராஜ் உட்பட பலர் நடித்த ’பேபி அண்ட் பேபி’ திரைப்படத்தை பிரதாப் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.