கமல்-மணிரத்னம் படத்தில் இணைந்த பிரபல ஹீரோ.. பான் - இந்தியா படமாக்க முயற்சியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ’கமல் 234’. இந்த படத்தின் போஸ்டர் சற்றுமுன் வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு பட பிரபலமான துல்கர் சல்மான் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’ஓகே கண்மணி’ என்ற படத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்த நிலையில் மீண்டும் மணிரத்னத்துடன் இணைந்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசனுடன் முதல் முறையாக இணைகிறார் என்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரண்டு மேதைகள் இணையும் படத்தில் நான் இணைந்ததில் மகிழ்ச்சி, இந்த படத்தில் எனக்கு கற்றுக்கொள்ள அதிக வாய்ப்பு இருக்கும், என் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரும் ஆசியாக கருதுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல மலையாள நடிகர் ’கமல் 234’ படத்தில் இணைந்ததை அடுத்து தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி நடிகர்களும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இந்த படத்தை ஒரு பான் - இந்திய படமாக்க மணிரத்னம் முயற்சி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
A legendary reunion of the masters Mani Sir and Kamal Sir ! A learning opportunity of a lifetime. So blessed and grateful to be a part of #KH234 #TitleAnnouncementToday5pm#Ulaganayagan #KamalHaasan #CelebrationBeginsNov7 #HBDUlaganayagan #HBDKamalSir@ikamalhaasan… pic.twitter.com/ecCcoHveZs
— Dulquer Salmaan (@dulQuer) November 6, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com