செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பிரபல இந்திய பாடகி.
- IndiaGlitz, [Thursday,June 20 2024]
பிரபல பாடகி ஆல்கா யாக்னிக் 1965இல் மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் பிறந்தவர்.இவர் அனைவராலும் அறியப்பட்ட இந்திய பிரபல பின்னணி பாடகி ஆவார்.
பிலிம்ஃபேர் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை ஏழு முறை பெற்றவர்.மொத்தமாக 500 படங்களுக்கு பின்னணி பாடகியாக பாடி அசத்தியுள்ளார்.சிறந்த பாடகிக்கான தர வரிசை பட்டியலில் இவரும் ஒருவர்.
உலகில் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள்கள் இவரது பாடலை கேட்டு ரசித்து கொண்டாடியவர்கள்.இனிமையான குரலை கொண்டவர்.'ஓரம் போ'படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து இது என்ன மாயம்என்ற பாடலை பாடியுள்ளார்.'ஏக் தோ தீன்' பாடல் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்றவர்.மேலும் 'சோலி கே பீச்சே காகே'என்ற பாடல் இன்று வரை மக்கள் மனதில் பதிந்துள்ள ஒன்றாகும்.
25 மொழிகளில் 21 ஆயிரம் பாடல்களை பாடி அசத்திய பாடல் நாயகி.ஆறு வயதிலேயே ஆல் இந்தியா ரேடியோவில் பஜனை பாடலை பாடியுள்ளார்.
இசை மீது உள்ள ஆர்வத்தினால் பாடகியாகவே மாறினார்.2 தேசிய விருதை பெற்றுள்ளார்.தன் குரலால் பலரின் மனதை வருடிய இவர் தற்போது அரிய செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது பக்கத்தை தொடரவும்.