மீண்டும் கார்த்தியுடன் இணையும் பிரபல நடிகை .. இயக்குனர் இவர் தான்!
- IndiaGlitz, [Monday,September 26 2022]
நடிகர் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்த நிலையில் தற்போது மீண்டும் கார்த்தி - ராஷ்மிகா மந்தனா ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடித்த 'சர்தார்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது
இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த திரைப்படத்தை ராஜூ முருகன் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 5ஆம் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு ’ஜ்ப்பான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும், ‘புஷ்பா’ வில்லன் சுனில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ட்ரீம் வாரியர் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.