'மகாராஜா' படத்தில் நடிக்க விரும்பிய பிரபல ஹீரோ.. ஆனால் விஜய்சேதுபதிக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

  • IndiaGlitz, [Sunday,June 16 2024]

’மகாராஜா’ திரைப்படத்தின் கதையை கேட்டு பிரபல ஹீரோ ஒருவர் அதில் நடிக்க விரும்பியதாகவும் ஆனால் விஜய் சேதுபதி நடித்ததால் அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

’மகாராஜா’ திரைப்படத்தின் கதையை ஃபேஷன் ஸ்டுடியோ நிறுவனத்திடம் சொல்லி அந்நிறுவனத்திற்காக இயக்க இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு இந்த படத்தின் கதையை தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் கூறியதாகவும் அவர் இந்த படத்தை நானே தயாரிக்கிறேன், என்னிடம் விஜய் ஆண்டனி கால்ஷீட் இருக்கிறது, எனவே நாம் இந்த படத்தை தொடங்குவோம் என்று கூறியதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஆனால் நான் ஏற்கனவே ஃபேஷன் ஸ்டுடியோ நிறுவனத்திடம் பேசி அட்வான்ஸ் வாங்கி விட்டேன் அவர்கள் ஒருவேளை என்ஓசி கொடுத்தால் நான் உங்களுக்காக இந்த படத்தை பண்ணுகிறேன் என்று நிதிலன் சுவாமிநாதன் கூறியதாகவும் தனஞ்செயன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஃபேஷன் ஸ்டுடியோ ’மகாராஜா’ படத்தை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை என்றும் நாங்கள் தான் தயாரிப்போம் என்று கூறிய அந்நிறுவனம் விஜய் சேதுபதியை வைத்து படத்தை தயாரித்ததாக தனஞ்செயன் கூறியுள்ளார். இதனால் தன்னால் ’மகாராஜா’ படத்தை தயாரிக்க முடியவில்லை என்றும் விஜய் ஆண்டனியும் இந்த படத்தின் கதையை கேட்டு நடிக்க ஆர்வமாக இருந்ததாகவும் தனஞ்செயன் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

விஜய் சேதுபதி பிசியான ஷெட்யூலிலும் நிதிலன் சுவாமிநாதன் கேட்ட கால்ஷீட்டை கொடுத்ததால் இந்த படம் குறிப்பிட்ட காலத்திற்குள் தயாராகி தற்போது அவருக்கு வெற்றி படமாகவும் அமைந்துள்ளது.

More News

மொட்டைத் தலையுடன் காட்சி அளிக்கும் 'காதல்' பட நடிகை.. என்ன ஆச்சு? வைரல் வீடியோ..!

பரத், சந்தியா நடிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான 'காதல்' திரைப்படத்தில் நடித்த நடிகை திடீரென மொட்டை தலையுடன் உள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

மிகப்பெரிய அவமானம்.. ஏண்டா நடிச்சோம்ன்னு இருக்கு: 'எதிர்நீச்சல்' சீரியல் குறித்து வேல ராமமூர்த்தி..!

'எதிர்நீச்சல்' சீரியலில் ஜி. மாரிமுத்து கொண்டிருந்த நிலையில் அவர் திடீரென காலமானதால் அவரது குணசேகரன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடித்த நிலையில்

குழந்தைகளுடன் குழந்தையாய் மாறி விட்ட விக்கி.. உலக தந்தையர் தினத்தில் க்யூட் வீடியோ..!

இன்று உலகம் முழுவதும் உலக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல திரையுலக பிரபலங்கள் தங்கள் தந்தையுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து

பிறந்து 20 நாள் தான்.. க்யூட் குழந்தையுடன் போட்டோஷூட் எடுத்த நடிகை ஸ்ரீதேவி அசோக்..!

சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் அவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையுடன் அவர் எடுத்துள்ள க்யூட் போட்டோஷூட்

கையில் கோப்பை.. நீச்சல் குளத்தில் பிகினி.. கிளாமரில் கலக்கும் பாடகி ஜொனிதா காந்தி..!

பிரபல பாடகி ஜொனிதா காந்தி நீச்சல் குளத்தில் கையில் கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரல்