கார்த்தி - பிரேம்குமார் படத்தில் இந்த பிரபல நடிகர் இணைகிறாரா? எகிறும் எதிர்பார்ப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தியின் 27வது திரைப்படத்தை ’96’ பட இயக்குனர் பிரேம்குமார் இயக்க இருப்பதாக வெளியான தகவலை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக கூறப்படுவது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
கார்த்தி தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் உருவான ’ஜப்பான்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இதனை அடுத்து நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கார்த்தி தற்போது நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கார்த்தியின் 27வது திரைப்படத்தை ’96’ பட இயக்குனர் பிரேம் குமார் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் அரவிந்த்சாமி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுவது. குடும்ப செண்டிமெண்ட் மற்றும் எமோஷனல் கலந்த இந்த படத்தில் அரவிந்த்சாமியின் கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு நலன் குமாரசாமி படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தொடங்கும் என்றும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments