வெட்கக்கேடு, 3 ரயில்கள் எப்படி மோதும்.. பிரபல இயக்குனர் ஆவேசம்..!
- IndiaGlitz, [Saturday,June 03 2023]
நேற்று ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து பிரபல இயக்குனர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ’வெட்கக்கேடு.. மூன்று ரயில்கள் எப்படி மோதும்? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
ஒடிசா அருகே கோரமண்டலம் எக்ஸ்பிரஸ், பெங்களூர் ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்ட விபத்தில் 200 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இந்த மூன்று ரயில்கள் மோதியது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் மனித தவறா? அல்லது சிக்னல் தவறா என்பது குறித்து அறிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் மோதியது கூட எதிர்பாராத விபத்து என்றாலும் மூன்றாவது ரயில் பெங்களூர் ஹவுரா ரயில் மோதியதை தவிர்த்து இருக்கலாம் என்று இது முழுக்க முழுக்க மனித தவறுகள் தான் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விவேக் ரஞ்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ’ரொம்ப வெட்கக்கேடான ஒரு விஷயம், இந்த காலத்தில், இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கும் நிலையில், பாதுகாப்பு அம்சங்கள் வளர்ந்த நிலையில் எப்படி 3 ரயில்கள் ஒரே நேரத்தில் மோதி விபத்துள்ளாகும்? இதற்கு பொறுப்பு ஏற்க போவது யார்? உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரார்த்தனை செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.