விஷால்-ஹரி படத்தை தயாரிப்பது இந்த பிரபல இயக்குனரா? அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இந்த படத்தை தயாரிப்பது தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனர் என்ற தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான ’யானை’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய அடுத்த படத்தில் விஷால் நடிக்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ சவுத் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் 14வது படமாகவும் விஷாலின் 34 வது படமாகவும் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஹரி இயக்கத்தில் விஷால் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ’தாமிரபரணி’ கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ’பூஜை’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் விஷால் - ஹரி இணையும் மூன்றாவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Extremely happy to announce that our #Production14 is #Vishal34 🩺🔥
— Stone Bench (@stonebenchers) April 23, 2023
A massive action entertainer starring Puratchi Thalapathy @VishalKOfficial directed by #Hari
Produced by @stonebenchers and @ZeeStudiosSouth@kaarthekeyens @karthiksubbaraj @Kirubakaran_AKR @TheVinothCj pic.twitter.com/0U7WFUBSIb
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments