விஷால்-ஹரி படத்தை தயாரிப்பது இந்த பிரபல இயக்குனரா? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,April 23 2023]

விஷால் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இந்த படத்தை தயாரிப்பது தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனர் என்ற தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான ’யானை’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய அடுத்த படத்தில் விஷால் நடிக்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ சவுத் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் 14வது படமாகவும் விஷாலின் 34 வது படமாகவும் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஹரி இயக்கத்தில் விஷால் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ’தாமிரபரணி’ கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ’பூஜை’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் விஷால் - ஹரி இணையும் மூன்றாவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

குக் வித் கோமாளியில் இந்த வார எலிமினேஷன் இவரா? யாரும் எதிர்பாராத முடிவு..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் கடந்த மூன்று சீசன்களாக இந்த நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்ற நிலையில்

சமூக பொறுப்பு என சொல்வது ஒரு வியாபாரம் ஆகிவிட்டது: நடிகர் இளவரசு பிரத்யேக பேட்டி..!

தமிழ் திரை உலகின் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் இளவரசு என்பதும் இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது இந்த இயக்குனரா? இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே?

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பதும் தெரிந்ததே.

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. மிரள வைக்கும் மேக்கிங் வீடியோ..!

சிவகார்த்திகேயன் நடிப்பில், தேசிய விருது பெற்ற 'மண்டேலா' என்ற திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வந்த 'மாவீரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில்

ஷாந்தனுவின் 'இராவண கோட்டம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் ஷாந்தனு பாக்யராஜ் நடிப்பில் 'மதயானை கூட்டம்' இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான 'இராவண கோட்டம்' என்ற திரைப்படம் ரிலீசுக்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை