'தளபதி 67' படத்திற்கு 47 நாட்கள் கால்ஷீட் கொடுத்தாரா இந்த பிரபலம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் அவர் நடிக்கயிருக்கும் 67வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகயிருக்கும் இந்த படம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் உள்பட 6 வில்லன்கள் நடிக்க இருப்பதாகவும் த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 3 நாயகிகள் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன்களில் ஒருவராக பிரபல இயக்குனர் கௌதம் மேனன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவர் இந்த படத்திற்காக 47 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கெளதம் மேனனிடம் 47 நாட்கள் கால்ஷீட்டை லோகேஷ் வாங்கி இருக்கிறார் என்றால் அவர் இந்த படம் முழுவதும் ட்ராவல் செய்யும் ஒரு கேரக்டரில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை லலித் குமார் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments