அரசியலுக்கு வரப்போவதாக சொன்னீர்களே.. எப்போது வருவீர்கள்? அஜித்துக்கு கேள்வி எழுப்பிய இயக்குனர்..!

  • IndiaGlitz, [Friday,December 29 2023]

நீங்கள் அரசியலுக்கு வருவதாக பிரபல நடிகர் ஒருவரிடம் சொன்னீர்களே? ஏன் வரவில்லை ? எப்போது வருவீர்கள்? என்று பிரபல இயக்குனர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளார்

‘பிரேமம்’ உள்பட ஒரு சில வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது இன்ஸ்டாகிராமில் அஜித் குறித்து பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் ’நிவின் பாலி மற்றும் சுரேஷ் சந்திரா ஆகிய இருவரும் நீங்கள் அரசியலுக்கு வர இருப்பதாக கூறியதை நான் கேள்விப்பட்டேன்.

‘பிரேமம்’ படத்தில் நிவின் பாலி நடிப்பை கண்டு வியந்த உங்கள் மகள் அனோஷ்காவுக்காக நிவின்பாலியை நீங்கள் வீட்டிற்கு அழைத்து பேசினீர்கள். அப்போது நீங்கள் அவரிடம் அரசியலுக்கு வர இருப்பதாக கூறினீர்கள். ஆனால் உங்களை இதுவரை நான் அரசியல் கட்சிகளில் பார்க்கவில்லை.

ஒன்று அவர்கள் என்னிடம் பொய் சொல்லி இருக்க வேண்டும் அல்லது நீங்கள் அதை மறந்திருக்க வேண்டும். அல்லது வேறு ஏதோ உங்களுக்கு பிரச்சனை இருந்திருக்க வேண்டும். இது மூன்றும் இல்லை என்றால் எனக்கு கடிதம் வழியாக பொதுவெளியில் விளக்கம் அளிக்க வேண்டும். ஏனெனில் உங்களை நான் நம்புகிறேன், பொதுமக்களும் நம்புகிறார்கள்’ என்று பதிவு செய்துள்ளார்

ஏற்கனவே விஜயகாந்த் கொலைக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடியுங்கள் என நேற்று உதயநிதிக்கு அல்போன்ஸ் புத்திரன் தனது இன்ஸ்டாகிராமில் வேண்டுகோள் விடுத்து இருந்த தற்போது அஜித் அரசியலுக்கு வரவிருப்பதாக பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

கமல், ரஜினி, அஜித், விஜய்யை அடுத்து இன்னொரு பிரபல நடிகரின் படத்தில் த்ரிஷா?

 ஒரே நேரத்தில் கமல், ரஜினி, அஜித், விஜய் என 4 முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா, அடுத்ததாக இன்னொரு பிரபல நடிகரின் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

எல்லோருக்கும் ஒரே உணவு.. பசியாற்றிய வள்ளல்.. விஜயகாந்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்..!

தேமுதிக தலைவர், புரட்சி கலைஞர் நடிகர் விஜயகாந்த் நேற்று காலமான நிலையில் அவரது உடல் தற்போது சென்னை தீவு திடலில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள்,

தன்மானத்தை தனது உயிரை விட பெரிதாக கருதியவர் விஜயகாந்த்: நடிகை ராதிகா..

தனது உயிரை விட தன்மானத்தை பெரிதாக கருதியவர் கேப்டன் விஜயகாந்த் என நடிகை ராதிகா புகழாரம் சூட்டியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் நேற்று காலமான நிலையில் அவருடன் பல திரைப்படங்களில்

'டிக்கெட் டு பினாலே கடைசி டாஸ்க்கில் திடீர் திருப்பம்.. 5 டிக்கெட்டுக்களை வெல்பவர் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் பினாலே என்ற டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் தற்போதைய நிலையில் நிக்சன் தான் அதிக டிக்கெட்டுகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.

அமெரிக்காவில் இருந்து இரங்கல் செய்தி வெளியிட்ட நடிகர்.. என்ன ஒரு ஆழமான நட்பு..!

கேப்டன் விஜயகாந்த் இன்று காலை காலமான நிலையில் அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.