சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபலம்: என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த படத்திலிருந்து தான் விலகி விட்டதாக சமூக வலைதளத்தில் பிரபலம் ஒருவர் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக்கி வரும் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ’லால் சலாம்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளனர் என்பது தெரிந்ததே. லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தில் காஸ்டியூம் டிசைனராக பணிபுரிய பூர்ணிமா ராமசாமி என்பவர் ஒப்பந்தமான நிலையில் அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்க அறிவித்துள்ளார். ஆரம்பகட்ட பணியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான் ’லால் சலாம்’ படத்திலிருந்து விலகிவிட்டேன், இனி அடுத்து வரும் போஸ்டர்களில் எனது பெயரை நீக்கி விடவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெருங்கிய தோழிகளில் ஒருவரான பூர்ணிமா ராமசாமி, திடீரென ’லால் சலாம்’ படத்திலிருந்து விலகியது ஏன் என தெரியவில்லை. பாலாவின் ’பரதேசி’ படத்துக்காக தேசிய விருது பெற்ற பூர்ணிமா ராமசாமி, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ’தானா சேர்ந்த கூட்டம்’, ‘சூரரை போற்று’ உள்பட பல படங்களில் பூர்ணிமா பணிபுரிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Due to irrevocable differences in preproduction stage I will not be part of the project Lal Salaam….@ash_rajinikanth @LycaProductions
— Poornima Ramaswamy (@PoornimaRamasw1) January 21, 2023
Just making a clear statement to remove my name from all posters in the future
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com