இவர்கள் ஒரு பிரபல நடிகையின் பெற்றோர்கள்: கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

  • IndiaGlitz, [Monday,June 21 2021]

நேற்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் அனுசரிக்கப்பட்டதை அடுத்து தந்தையர் குறித்து தங்களது மலரும் நினைவுகளை தமிழ் திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் சமூக வலைதளங்களில் தெரிவித்தனர் என்பதும் நேற்று தந்தையர் தினம் என்ற ஹேஷ்டேக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய், அஜித் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை அனுஷ்கா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் தனது அதில் ’ஒரு பெண்ணை தன் தந்தையை விட அதிகமாக இந்த உலகில் யாரும் நேசிக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அனுஷ்கா ஷெட்டியின் இந்த பதிவில் உள்ள வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் அனுஷ்காவின் தாயார் மற்றும் தந்தையார் இருக்கும் புகைப்படங்கள் உள்ளன என்பதும், இந்த வீடியோவையும் அதில் உள்ள புகைப்படங்களையும் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.