திருமணமான இரண்டே வருடங்களில் மர்ம மரணம் அடைந்த பிரபல நடிகை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

  • IndiaGlitz, [Monday,December 02 2024]

பிரபல நடிகைக்கு திருமணமாகி இரண்டு வருடங்களே ஆகும் நிலையில், அவர் மர்மமான முறையில் மரணமடைந்ததாக வெளிவந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட பிரபல நடிகை சோபிதா சிவன்னா கர்நாடக மாநிலம் ஹாசன் என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் கன்னட திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 30 வயதான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர், அவர் ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது கணவருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு சோபிதா சிவன்னா மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

போலீசார் விசாரணை செய்து வருவதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. நடிகை சோபிதா சிவன்னா இறந்த செய்தி, அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More News

பைக் ரேஸை கண்ணிமைக்காமல் பார்க்கும் தல அஜித்.. டிரெண்டிங் வீடியோ..!

கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ்சில் அதிக ஆர்வம் உள்ள அஜித், அது குறித்த வீடியோ அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகும் என்பது தெரிந்தது.

அஜித் படத்துடன் மோதும் 'கேம் சேஞ்சர்'.. எஸ்ஜே சூர்யா என்ன சொல்கிறார் தெரியுமா?

அஜித் நடித்த 'விடாமுயற்சி' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதே நாளில் ரிலீஸ் ஆகும் 'கேம் சேஞ்சர்'

நள்ளிரவில் நடந்த கூத்து.. படுக்கையில் கால்களை மேலே போட்டு கட்டிப்பிடித்த ஜாக்குலின்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஜாக்குலின் நள்ளிரவில் படுக்கையில் தனது அருகில் படுத்தவர் மீது காலை மேலே போட்டு கட்டிப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆவதை அடுத்து,

சீனாவை அடுத்து இன்னொரு நாட்டில் ரிலீஸ் ஆகும் ‘மகாராஜா’.. குவியும் வசூல்..!

விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான 'மகாராஜா' திரைப்படம், கடந்த ஜூன் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திடீரென விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு.. நயன்தாரா ரசிகர்கள் அதிர்ச்சி..!

இயக்குனர் விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு காரணமாக நயன்தாரா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.