சூர்யா-பாலா படத்தில் இணையும் பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Monday,March 14 2022]

சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அவரது அடுத்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யா ஜோடியாக இந்த படத்தில் ஜோதிகா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ’தி வாரியர்’ என்ற படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.