close
Choose your channels

'மூன்று முடிச்சு' தொடரில் இணையும் இன்னொரு பிரபல நடிகை.. எகிறுமா டிஆர்பி?

Tuesday, September 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "மூன்று முடிச்சு" தொடர், தொடங்கிய இரண்டே வாரங்களில் டிஆர்பியில் ஐந்து இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது. மேலும், தற்போது இந்த தொடரில் இன்னொரு பிரபல நடிகை இணைந்துள்ளதால், டிஆர்பியில் இன்னும் முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் "மூன்று முடிச்சு" தொடரில் நாயகனாக நியாஸ், நாயகியாக சுவாதி கோண்டே ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த தொடர் ஆரம்பித்த சில நாட்களிலேயே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நந்தன் சி முத்தையா என்பவர் இந்த தொடரை இயக்குகிறார். இவர், விஜயகாந்த் நடித்த "ரமணா" படத்தின் கதை ஆசிரியரும், "தென்னவன்" படத்தின் இயக்குனரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ’மூன்று முடிச்சு’ சீரியலில் நடிகை சுவாதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது "பூவா தலையா" தொடரில் நடித்த தர்ஷனாவும் இந்த தொடரில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே தொடரில் இரண்டு பிரபல நடிகைகள் நடிப்பதால் இந்த தொடருக்கு கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment