பிரபல இளம் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை.. கடைசி வாட்ஸ்அப் பதிவில் அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,April 30 2024]

இளம் நடிகை ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது கடைசி வாட்ஸ் அப் பதிவில் உள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தி மற்றும் போஜ்புரி மொழி படங்களில் நடித்தவர் நடிகை அம்ரிதா பாண்டே. இவர் சில தொலைக்காட்சி சீரியல் மற்றும் வெப் தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணமான இவர் மும்பையில் வசித்து வந்த நிலையில் சமீபத்தில் தனது சகோதரியின் திருமணத்திற்காக அவரது வீட்டிற்கு சென்றதாகவும் திருமணம் முடிந்த சில நாட்கள் அங்கு தங்கியிருந்த போது அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் திடீரென தனது அறையின் கதவை மூடிக்கொண்ட அம்ரிதா பாண்டே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் இதுகுறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் அவர் தனது கடைசி வாட்ஸ்அப் பதிவில், ‘இரண்டு படகுகளில் வாழ்க்கை இருக்கிறது. அப்படி ஏன் சவாரி செய்ய வேண்டும். அதனால் அந்த படகை மூழ்கடித்து என்னுடைய பாதையை எளிதாக்கி கொண்டேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.