பாடகி சுசித்ரா மீது அவதூறு வழக்கு தொடர்ந்த பிரபல நடிகை.. என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாடகி சுசித்ரா அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பிரபல நடிகையும் அவருடைய கணவரும் போதை பார்ட்டி நடத்தியதாக கூறிய நிலையில் அந்த நடிகை, சுசித்ரா மீது அவதூறு வழக்கு தொடர போவதாக கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள திரையுலகில் ஹேமா கமிஷன் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் தொடர்ச்சியாக பாடகி சுசித்ரா கூறிய ஒரு பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் நடிகை ரீமா கல்லிங்கல் மற்றும் அவரது கணவர் ஆஷிக் அபு ஆகிய இருவரும் போதை பார்ட்டிகள் நடத்தியதாக குறிப்பிட்டு இருந்தார். பல இளம் நடிகைகள் இந்த போதை பார்ட்டியில் கலந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுசித்ராவின் இந்த பேட்டிக்கு பதிலடி கொடுத்துள்ள ரீமா, இதுபோன்ற தவறான செய்திகளை எந்த அடிப்படை புரிதலும் இல்லாமல் சுசித்ரா கூறியுள்ளதாகவும், அவர் கூறியது போன்ற எந்த நிகழ்ச்சியையும் இதுவரை நாங்கள் நடத்தவில்லை, நான் இது தொடர்பாக சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்று தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
மேலும் சுசித்ரா மீது சிறப்பு விசாரணை குழுவில் புகார் அளித்துள்ளேன் என்றும் அவர் மீது வழக்கு அவதூறு வழக்கு தொடர நோட்டீஸ் அனுப்பி உள்ளேன் என்றும் ரீமா கல்லிங்கல் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments