'புஷ்பா 2' படத்தில் ஒரு 'ஓ சொல்றியா மாமா' பாடல் .. ஆடப் போவது இந்த பிரபல நடிகையா?

  • IndiaGlitz, [Sunday,July 30 2023]

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார் என்பதும் ’ஓ சொல்றியா மாமா’ என்ற இந்த பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியிருப்பார் என்பதும் தெரிந்ததே. இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் மிகப்பெரிய அளவில் ஹிட்டான நிலையில் சமந்தா இந்த ஒரு பாடலுக்காகவே கோடி கணக்கில் சம்பளம் வாங்கியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ’புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ’ஓ சொல்றியா மாமா’ பாடலைப் போன்ற ஒரு பாடலை வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

’புஷ்பா 2’ படத்தில் இடம்பெற்ற இந்த பாடலுக்கு சமந்தா ஆடவில்லை என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில் வேறு சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தற்போது தெலுங்கில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஸ்ரீ லீலா இந்த பாடலுக்கு நடனமாட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீ லீலா தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக உருவாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்றும் முதல் பாகத்தில் இருந்த பாடலை விட இரு மடங்கு இந்த பாடல் வரவேற்பு பெறும் வகையில் கிளாமர் மற்றும் குத்துப்பாட்டாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் ’புஷ்பா 2’ படத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சுனில் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சுகுமார் இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மகனின் 14வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஷால்.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகர் விஷால் தனது மகனைப் போல் கருதி வளர்த்து வரும்  செல்ல நாயின் 14 வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ள நிலையில்  அந்த புகைப்படம் தற்போது

ஆர்யா - கெளதம் கார்த்திக் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகர்.. மாஸ் அறிவிப்பு..!

ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் இன்னொரு  பிரபல நடிகர் இணைந்துள்ள மாஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு போராடிய இளைஞர் சமுதாயம் வேடிக்கை பார்க்கிறதே.. என்.எல்.சி விவகாரம் குறித்து பிரபல இயக்குனர்..!

என்எல்சி விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பிரபல இயக்குனர் தங்கர்பச்சான், 'ஜல்லிக்கட்டுக்கு போராடிய இளைஞர் சமுதாயம் இந்த பிரச்சனைக்கு போராடாமல்

இன்று 'லியோ' பிரபலத்தின் பிறந்தநாள்.. மாஸ் வீடியோ வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்..!

இன்று 'லியோ' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் பிறந்த நாளை அடுத்து அவரது கேரக்டருடன் கூடிய வீடியோ ஒன்றை  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்

திரைத்துறையில் ஒரு சூப்பர் ஸ்டாரின் சகாப்தம் முடிந்துவிட்டது: பிரபல தயாரிப்பாளர் கருத்து..!

சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் அவர்கள் மட்டுமே என்றும் இன்னொருவரை சூப்பர் ஸ்டார் என்று அழைக்க முடியாது என்றும் நேற்று 'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழாவில் பலர் கூறினர்.