கார்த்தி தங்கையாக நடிக்க ஒப்புக் கொண்ட பிரபல நடிகை.. என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக பிரபல நடிகைகள் பிரபல ஹீரோக்களுக்கு சகோதரியாக நடிப்பதற்கு தயங்குவார்கள் என்பதும் பல நடிகைகள் அப்படி வாய்ப்பு வந்த போது நடிக்க முடியாது என்று கூறி இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் பிரபல நடிகை ஒருவர் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தில் சகோதரியாக நடிக்க ஒப்புக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி நடித்து வரும் 27வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகை ஸ்ரீ திவ்யா இணைந்தார் என்ற செய்தி வெளியானது. இதனை அடுத்து அவர் கார்த்திக் ஜோடியாக தான் நடிப்பார்கள் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி அவர் கார்த்தியின் சகோதரியாக நடித்து வருவதாக தெரிகிறது. நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து அவர் கார்த்திக்கு சகோதரியாக நடிக்க ஒப்புக் கொண்டதாக இருக்கிறது.
மேலும் இந்த படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்து வருகிறார் என்பதும் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் நட்பு மற்றும் காதல் கதை அம்சம் கொண்டது என்றும் தெரிகிறது. இந்த படத்தில் நடிகை சுவாதி கொண்டே நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்திற்கு மெய்யழகன் என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout