ஒரே நேரத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை..! கோலிவுட் ஆச்சரியம்..!

  • IndiaGlitz, [Thursday,September 14 2023]

ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகிய நான்கு மாஸ் நடிகர்களுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது திரை உலகிற்கு வரும் நடிகைகளின் ஆசையாக இருக்கும். ஆனால் ஒரே நேரத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகிய நான்கு மாஸ் நடிகர்களின் படங்களில் நடிக்க ஒரு நடிகைக்கு வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் கோலிவுட் திரையுலகம் இதை ஆச்சரியமாக பார்த்து வருகிறது. அந்த அதிசய நடிகை தான் த்ரிஷா.

நடிகை த்ரிஷா ஏற்கனவே விஜய்யுடன் ’லியோ’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனை அடுத்து அவர் அஜித் நடிக்க இருக்கும் ’விடாமுயற்சி’ திரைப்படத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

அதேபோல் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ’கமல் 234’ படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ’தலைவர் 171’ திரைப்படத்திலும் அவர்தான் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினியுடன் ’பேட்ட’ திரைப்படத்தில் நடித்த த்ரிஷா மீண்டும் ரஜினி படத்தில் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு பின் த்ரிஷா வேற லெவல் உச்சத்திற்கு சென்று உள்ளார் என்பதும் இன்னும் சில வருடங்களுக்கு தென்னிந்திய திரையுலகில் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

அமிர்கான் மகனுக்கு ஜோடியாகும் தமிழ் நடிகை.. வேற லெவல் தகவல்..!

பிரபல பாலிவுட் நடிகை அமீர் கானின் மகன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் தமிழ் நடிகை ஒருவர் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

சூர்யா-சுதா கொங்கரா படத்தின் நாயகி இவரா? 10 வருடங்களுக்கு பின் மீண்டும் ரீஎண்ட்ரி..!

சூர்யா மற்றும் சுதா கொங்கரா மீண்டும் இணையும் திரைப்படத்தின் நாயகியாக பத்து வருடத்திற்கு பின் பிரபல நடிகை ஒருவர் ரீஎண்ட்ரி செய்ய இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளன.

திடீரென அப்பா, அம்மாவை சந்தித்த தளபதி விஜய்.. வைரல் புகைப்படம்..!

தளபதி விஜய் தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்களுடன் சில ஆண்டுகள் பேசாமல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் தந்தை, தாயை சந்தித்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஒரே ஜாதியா இருந்தாலும் தலக்கட்டு வேற வேற தான.. 'மார்கழி திங்கள்' டிரைலர்..!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'மார்கழி திங்கள்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரிஜினல் வெப் சீரிஸ் 'மை3': ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

இயக்குநர் ராஜேஷ் M இயக்கத்தில் உருவாகியிருக்கும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரிஜினல் சீரிஸான “மை3” வெப் சீரிஸ், செப்டம்பர் 15 முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது !!