நான் செத்தால் வரும் இன்சூரன்ஸ் பணத்தில் என் 4 குழந்தைகள் நன்றாக இருப்பார்கள்: நடிகரின் அதிர்ச்சி பேட்டி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நான் தற்கொலை செய்து அல்லது வேறு வகையில் செத்துவிட்டால் என்னுடைய நான்கு குழந்தைகள் என் மரணத்தினால் கிடைக்கும் இன்சூரன்ஸ் பணத்தில் நன்றாக இருப்பார்கள் என்று யோசித்தேன் என பிரபல நடிகர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜியான்கார்லோ எஸ்போசிட்டோ என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்து பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ’பிரேக்கிங் பேட்’ என்ற டிவி தொடரில் இவர் வில்லனாக நடித்திருந்தார் என்பதும் இவருக்கு வில்லன் கேரக்டர் மிகவும் பொருத்தமாக அமைந்ததால் மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றார் என்பதும் இந்த தொடர் பெற்ற வெற்றியின் காரணமாக பல புதிய வாய்ப்புகளை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’பிரேக்கிங் பேட்’ தொடரில் நடிப்பதற்கு முன் பல ஆண்டுகளாக பொருளாதாரச் சிக்கலில் இருந்ததாகவும், தன்னுடைய நான்கு குழந்தைகள் நான் செத்துவிட்டால் வரும் இன்சூரன்ஸ் பணத்தில் நன்றாக வாழ்வார்கள் என்று கூட நினைக்க எனக்கு தோன்றியது என்றும் அந்த சமயத்தில் தனக்கு அடிக்கடி தற்கொலை எண்ணங்கள் வந்தது என்றும் தெரிவித்தார்.
ஆனால் அதே நேரத்தில் நான் இல்லாமல் என் குழந்தைகள் வளர்ந்தால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் வலியுடன் இருப்பார்கள் என்று சிந்திக்க ஆரம்பித்தேன் என்றும் அந்த சமயத்தில் தான் எனக்கு திருப்புமுனையாக ’பிரேக்கிங் பேட்’ வாய்ப்பு கிடைத்தது என்றும் அதன் பிறகு தற்போது நான் நல்ல பொருளாதார சூழ்நிலையில் இருக்கிறேன் என்று மாறத் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com