சூர்யா-சுதா கொங்காரா படத்தில் இன்னொரு பிரபல ஹீரோ.. மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Friday,July 28 2023]

சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தில் தற்போது இன்னொரு பிரபல ஹீரோவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தை அடுத்து சூர்யா நடிக்க இருக்கும் திரைப்படத்தை சுதா கொங்காரா இயக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படம் குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யா - சுதா கொங்காரா இணைய இருக்கும் திரைப்படத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வழியாக உள்ளது. முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்க கார்த்தி தேர்வு செய்யப்பட்டிருந்ததாகவும் ஆனால் தற்போது துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.