மீண்டும் ட்விட்டர் புளூடிக் பெற்ற பிரபலம்.. ரஜினி, விஜய் பெறுவது எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் கொடுத்து வாங்கியவுடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் என்பதும் அவற்றில் ஒன்று ப்ளூடிக் வைத்து இருப்பவர்கள் சந்தா பணம் கட்ட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே.
மேலும் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் சந்தா பணம் கட்டாதவர்கள் ப்ளூடிக் நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்த நிலையில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக பல பிரபலங்களின் ப்ளூடிக் நீக்கப்பட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தோனி, விராட் கோஹ்லி உட்பட பல பிரபலங்களின் ப்ளூடிக் நீக்கப்பட்டது. இவ்வாறு ப்ளூடிக் நீக்கப்பட்டவர்களில் ஒருவர் பிரபல நடிகர் அமிதாப்பச்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமிதாப்பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’தான் ஏற்கனவே ப்ளூடிக் சந்தா பணம் செலுத்தி விட்டதாகவும், எனவே தனக்குரிய ப்ளூடிக் அளிக்க வேண்டும் என்றும் எலான் மஸ்க் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோள் ஏற்கப்பட்டு தற்போது அவருக்கு ப்ளூடிக் மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து எலான் மஸ்க் அவர்களுக்கு நன்றி கூறிய அமிதாப் பச்சன், ‘சகோதரர் எலான் மஸ்க் அவர்களுக்கு எனது நன்றி! என் பெயருக்கு முன் ப்ளூடிக் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. உங்களுக்காக ஒரு பாட்டு பாட வேண்டும் என்று தோன்றுகிறது என்று கூறி ஒரு பாடலை பதிவையும் பதிவு செய்துள்ளார்.
அமிதாப்பச்சனை அடுத்து ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோர் தங்களது புளூடிக்கை மீண்டும் எப்போது பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com