ஜீ டிவி சீரியலில் இணையும் பிரபல நடிகரின் மகள்.. சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Thursday,September 19 2024]

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரின் மகள் ஜீ டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் நடிக்க இருப்பதை அடுத்து சின்னத்திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரை உலகில் ஹீரோ, குணச்சித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவருடைய மூத்த மகள் ஜோவிதா சில சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக மற்றும் அருவி என்ற சீரியல்களில் இவர் நடித்திருந்தார்.

அதன் பின்னர் மாடலிங் துறையில் கவனம் செலுத்தினார். இந்த நிலையில் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது ஜீ டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் ஜோவிதா நடிக்க உள்ளார்.

தெலுங்கு தொலைக்காட்சியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஜகாதாத்ரி என்ற தொடரின் தமிழ் ரீமேக் சீரியலில் ஜோவிதா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ள நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதாவுக்கு சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

More News

டான்ஸ் மாஸ்டர் ஜானி கைது.. தலைமறைவாகியிருந்தது எங்கே? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது

நடிகைகள் குறித்து சர்ச்சை பேச்சு.. ரோகிணி புகாரால் டாக்டர் காந்தாராஜ் எடுத்த அதிரடி முடிவு..!

நடிகைகள் குறித்து யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய வகையில் டாக்டர் காந்தராஜ் பேசிய நிலையில் அவர் மீது நடிகை ரோகினி புகார் அளித்த நிலையில் தற்போது டாக்டர் காந்தா ராஜ் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

இந்த வாரம் ஓடிடியில் 6 தமிழ் படங்கள்.. சினிமா ரசிகர்களுக்கு குஷி..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்கில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் நிலையில், திரையரங்கில் வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது

ஒரே வருடத்தில் ரூ.50 கோடி சம்பளம் வாங்கினாரா ஏஆர் முருகதாஸ்.. ஆச்சரிய தகவல்..!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், கடந்த நான்கு ஆண்டுகளாக திரைப்படங்கள் இயக்காமல் இருந்த நிலையில், தற்போது அவர் இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்

தனுஷ் விவகாரத்தில் தலையிடும் பெப்சி.. நடிகர் சங்கம் கண்டனம்..!

நடிகர் தனுஷ் விவகாரத்தில் கூட்டுக்குழு அமைக்க ஃபெப்சி வலியுறுத்தியுள்ளதாக செய்தி வெளியான நிலையில் இதுகுறித்து நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்ட