இது முழுக்க முழுக்க பொய்: ஜோதிகா விவகாரம் குறித்து விஜய்சேதுபதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ஜோதிகா சமீபத்தில் தஞ்சை பெரிய கோயில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வரும் நிலையில் இது குறித்து ஏற்கனவே ஜோதிகாவுக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து உள்ளனர் என்பதும் ஜோதிகாவின் கருத்து எந்த விதத்திலும் தஞ்சை பெரிய கோயிலை அவமதிக்கும் வகையில் இல்லை என்றும் விளக்கம் கூறி வந்தனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஜோதிகா விவகாரம் குறித்து விஜய்சேதுபதி ஒரு கருத்தை கூறியதாக ஒரு போலியான தகவல் மிக வேகமாக வைரலாகி வருகிறது. ஜோதிகா அவர்களின் துணிவான பேச்சுக்கு பாராட்டுக்கள் என்றும் அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் சக நடிகனாக முதல் ஆளாக இருப்பேன் என்று விஜய் சேதுபதி கூறியதாக ஒரு செய்தி பரவி வருகிறது. மேலும் மனிதனை மனிதன் தான் காப்பாற்ற வேண்டும் கடவுளால் வேடிக்கை பார்க்கத் தான் முடியும் என்றும் கோவில்கள் விரைவில் மருத்துவமனையாக மாற்றும் காலம் நெருங்கி விட்டது என்றும் அந்த விஜய்சேதுபதி கூறியதாக போலியான தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்து விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் ’இது முழுக்க முழுக்க பொய்யானது’ என்று தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதியின் டுவிட்டர் பக்கத்தை தவறாக பயன்படுத்தி மர்மநபர்கள் போட்டோஷாப் மூலம் இப்படி ஒரு வதந்தியை கிளப்பி உள்ளதால் திரை தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Fake ❌ pic.twitter.com/WR5vhXsXg7
— VijaySethupathi (@VijaySethuOffl) April 24, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments