அறிமுகப் போட்டியில் இரட்டை சதம் விளாசிய அசத்தல் வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனது முதல் டெஸ்ட் தொடர் போட்டியிலேயே நியூசிலாந்தை சார்ந்த இளம் வீரர் கான்வே இரட்டை சதம் அடித்து புதிய சாதனை படைத்து இருக்கிறார். இதனால் உலக அளவில் இந்தச் சாதனையைப் படைத்த 7 ஆவது வீரர் என்ற இடத்தையும் நியூசிலாந்து அளவில் 2 ஆவது வீரர் என்ற இடத்தையும் அவர் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிக் கொண்ட தொடர் தற்போது லண்டன் லார்டஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி நேற்றுமுன் தினம் தொடங்கிய நிலையில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றது. இதனால் பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களை எடுத்து இருந்தது. இதில் தொடக்க வீரரான கான்வே 136 ரன்களை எடுத்தும் நிக்கோலஸ் 46 ரன்களை எடுத்தும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
அடுத்த நாள் ஆட்டத்தில் நிக்கோலஸ் 61 ரன்களில் ஆட்டம் இழந்தார். இவருக்கு பின் வந்த அனைத்து வீரர்களும் விக்கெட்டைப் பறிக்கொடுக்க நியூசிலாந்து 338 ரன்கள் இருக்கும் நிலையில் 9 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. கூடவே தொடக்க வீரரான கான்வே 14 ரன்களை எடுத்தால் இரட்டை சதம் எனும் வெற்றி வாய்ப்பில் இருந்தார். இந்நிலையில் 10 ஆவது ஆட்டக்காரராக அந்த அணியின் நீல் வாக்னெர் களம் இறங்கினார். அவர் கான்வேக்கு ஒத்துழைப்பு கொடுத்து அதிரடி காட்டியதால் கான்வே தொடர்ந்து விளையாடினார். இறுதியில் கான்வே சிக்ஸர் அடித்து தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
இதையடுத்து நியூசிலாந்து அணி 378 ரன்களுடன் முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. தற்போது விளையாடி வரும் இங்கிலாந்து அணி 111/2 என்ற நிலையில் ஆடி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு கடந்த 1999 ஆம் ஆண்டில் நியூசிலாந்து வீரர் மேத்யூ சின்கிளைர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் 214 ரன்களை எடுத்து இருந்தார். தற்போது கான்வே இளம் வீரராக தனது இரட்டை சதத்தை பதிவு செய்து இருப்பது குறித்துப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout