சிறுமி மித்ராவுக்கு செலுத்தப்பட்ட ரூ.16 கோடி மதிப்பிலான ஊசிமருந்து: மீண்டு வர வாழ்த்துக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் என்ற பகுதியை சேர்ந்த சிறுமி மித்ராவுக்கு அரிய வகை நோய் இருந்ததை அடுத்து அவருக்கு ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சற்று முன் அந்த குழந்தைக்கு ரூ.16 கோடி மதிப்புடைய ஊசிமருந்து செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நாமக்கல் மாவட்டம் சதீஷ்குமார்-பிரியதர்ஷினி தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை மித்ரா. இவருக்கு அரியவகை முதுகு தண்டுவட சிதைவு நோய் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு ரூபாய் 16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.
இதனையடுத்து சமூக வலைதளங்கள் மூலம் அந்த குழந்தைக்காக நிதி திரட்டப்பட்டது. தமிழக அரசும் இந்த குழந்தைக்கு தேவையான மருந்து இறக்குமதி செய்ய வரியை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அந்த குழந்தைக்கு தேவையான மருந்தை இறக்குமதி செய்வதற்கான வரியை நீக்கினார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் இந்த செய்தி பரவியது என்பதும் குழந்தைக்காக திரையுலகினர் உள்பட ஏராளமானோர் நிதி அளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரூபாய் 16 கோடி நிதி மூலம் சேர்ந்ததை அடுத்து சுவிட்சர்லாந்திலிருந்து இந்த குழந்தைக்கு ஊசி மருந்து வரவழைக்கப்பட்டது. அந்த மருந்து சற்றுமுன் சிறுமி மித்ராவுக்கு செலுத்தப்பட்ட தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
முதுகு தண்டுவட சிதைவு என்று அறிய நோய் மூலம் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்டதை அடுத்து அவர் விரைவில் மீண்டு வர ஏராளமானோர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
#BREAKING
— ABP Nadu (@abpnadu) August 7, 2021
நாமக்கல் : குமாரபாளைத்தில் முதுகு தண்டுவடம் பாதித்த குழந்தை மித்ராவிற்கு ரூ.16 கோடி மதிப்பிலான மருந்து, பெங்களூரு தனியார் மருத்துவமனையில் ஊசி மூலம் செலுத்தப்பட்டது...
நன்கொடை மூலம் இறக்குமதி செய்யப்பட்ட மருந்திற்கு மத்திய அரசு வரி விலக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது pic.twitter.com/jKzTXmji6p
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments